ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி விடயத்தில் மஹிந்த vs பொன்சேகா கைகோர்த்த நிலையில்….


முன்னாள் இராணுவத் தளபதியும், இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து சரியானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இறுதி கட்ட போர் தொடர்பில் அண்மையில் நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.

“..போரின் கடைசி இரண்டு வாரங்களில் நாட்டில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி எவரும் இருக்கவில்லை எனவும், தாமே பதில் பாதுகாப்பு அமைச்சராக போரை வழிநடத்தினேன்..” என ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தார்.

எனினும், “.. போரின் போது தாமோ, மஹிந்தவோ, கோத்தபாயவோ அஞ்சி தப்பியோடவில்லை..” என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்தை தாமும் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் போர் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறு நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பது சிறு பிள்ளைகளுக்கு கூட தெரிந்த விடயமாகும் என அவர் அண்மையில் கொழும்பு ஊடகமொன்றுக்குத் கருத்துத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண்ணின் தகாத உறவால் மகன் பலி

wpengine

வீரவங்ச என்ற பாத்திரத்தின் வாழ்க்கை ஒரு நடிப்பு: இராஜாங்க அமைச்சர்

wpengine

கண்டியில் பலவந்தமாக பாலியல் வல்லுறவு

wpengine