உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ



தேசிய பத்திரிகைகள் பலவற்றில் பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்விளம்பரத்தை பிரசுரித்த பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து ரோஹித்த ராஜபக்ஷ இது தொடர்பில் உரையாடியுள்ளார்.

இதன் போது ரோஹித்த ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில்;

மைத்திரி வழியின்றி எங்கள் தந்தையின் கழுத்தில் தொங்கி கரை சேர முயற்சிக்கின்றார்.

யார் உங்களை இவ்வாறு இவற்றினை செய்யுமாறு கூறியதென அவர்களை ரோஹித்த ராஜபக்ஷ திட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

“முன்னணியின் வெற்றி உறுதி – எதிர்காலத்திற்கு சான்றிதழ் – மைத்திரி ஆட்சி” என்ற தலைப்பில் அனைத்து தேசிய பத்திரிகையிலும் கடந்த திங்கட்கிழமை விளம்பரங்கள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

(riz)

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்…

wpengine

கொழும்பு – காலி பிரதான வீதியில் துப்பாக்கிச் சூடு!

Azeem Kilabdeen

பம்பலபிட்டி பகுதியில் மற்றுமோர் தமிழ் மாணவி கடத்தல்..

wpengine