உள்நாட்டு செய்திகள்

மைத்திரி சந்திரிக்காவுக்கு வழி விடுவாரா?



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெகு விரைவில் ஜனாதிபதி, கட்சித் தலைவர் பதவியை கைவிட்டு கட்சி சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிக்கா குமாரதுங்கவுக்கே அப்பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் ஜனாதிபதி இப்பதவியை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அறிக்கையிட பிரதிச் சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

wpengine

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு…

wpengine

அரச வைத்தியர்கள் நாளை முதல் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில்..

wpengine