Uncategorized

மைத்திரிக்கு எதிரான புதிய எதிரணி! மஹிந்த கடும் எச்சரிக்கை


எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்காக மஹிந்த தரப்பினர் தனியாக ஒரு முன்னணியை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் புதிய முன்னணி உருவாக்க தீர்மானித்திருந்த போதிலும், மஹிந்த கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவடைய செய்து வரலாற்றில் துரோகியாவதற்கு தன்னால் முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்து செயற்படுமாறு மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஆதரவு தெரிவிக்கவில்லையெனில் வீட்டோடு இருந்து விடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் வருமான வீழ்ச்சியால் நிதி நெருக்கடி – பொருளியல் நிபுணர்கள்

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு

wpengine

மகேஷ் சேனாநாயக, மல்வத்து – அஸ்கிரிய தேரர்களிடம் ஆசி பெற்றார் [PHOTOS]

wpengine