உள்நாட்டு செய்திகள்

மே முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு இலவசம்..



அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்தார்.

நேற்று(07) பாராளுமன்றத்தில் மதிய போசன இடைவேளையின் பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமான போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

அவடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் மே முதலாம் திகதி மே’தின நிகழ்வுகளுக்காக பஸ் வண்டிகள் பயணிப்பதற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அறவிடப்படும் கட்டணங்களை அன்றைய நாள் மட்டும் கைவிடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைவாக நாம் அன்றை தினம் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளவதற்கான அனுமதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

 

(rizmira)

Related posts

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடன் முழுவதையும் செலுத்தியது இலங்கை..!

wpengine

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்

wpengine

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு பிற்போடப்பட்டது…

wpengine