உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் விசேட சோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையில் 737 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 3021 மோட்டார் சைக்கிள் மற்றும் 2493 முச்சக்கரவண்டிகள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், 7352 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாத 1749 பேருக்கு பொலிஸரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நள்ளிரவு வெளியான வர்த்தமானி அறிவித்தல்

wpengine

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டோரின் 9பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine

சன்ன மற்றும் நலீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine