உலக செய்திகள்

மேலும் ஒரு படகு விபத்து – 12 பேர் உயிரிழப்பு…



இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் 163 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று நடந்த மற்றொரு படகு விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகிலிருந்த 163 பேரில், சிலரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், சுலாவேஸி தீவு பகுதியில் நேற்று ஒரு படகு விபத்துக்குள்ளானது. 139 பேர் படகில் இருந்ததாகவும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான படகில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 66 பேர் உயிரிழப்பு…

wpengine

நேற்று 11 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தற்கு பகிரமாக இன்று 33 பலஸ்தீன பணயக் கைதிகளை விடுவித்த இஸ்ரேல்..!

wpengine

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று

wpengine