Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதி திரவ உரம் அடுத்த வாரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ள உரத் தொகையுடன் இலங்கையில் நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான முதலாவது நனோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதி போதுமானதாக இருக்கும் விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட முதலாவது தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரத்தை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை வந்தடைந்தார் ஜப்பானிய நிதியமைச்சர்..!

wpengine

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

Azeem Kilabdeen

கடமைக்குத் திரும்ப பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு காலக்கெடு…

wpengine