ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேற்கிந்திய தொடரில் டோனி விளையாடமாட்டார்



(FASTGOSSIP|COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி. ஓய்வு பெறும் முடிவை வெளியிடுமாறு நெருக்கடி உள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் தொடரில் டோனி விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலக கிண்ண தொடரை தொடர்ந்து, டோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பதில் காலதாமதம் செய்து வருகிறார்.

டோனி ஓய்வு முடிவு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும் அடுத்து வரும் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

குறித்த இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளைமறுதினம்(19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டோனி 11 பேர் கொண்ட அணியில் விளையாடாமல் அணிக்கு உதவி அளிக்கும் வகையில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

Related posts

பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம், நான் இலங்கையில் உள்ளேன் – சனத்

wpengine

தேசிய அணியை இன்றைய தினம் திரும்பி பார்க்கவைத்த முகம்மட் சிராஸ் [VIDEO]

wpengine

வழி தெரியாமல் நிற்பவர்களுக்கு உதவும் ரோபோ

wpengine