Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.

மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் இந்த ஆலோசனை கடந்த வாரம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்ததாகவும் அந்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்

மேர்வின் சில்வா கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் சென்று அதன் செய்திப் பணிப்பாளரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மேர்வின் சில்வாவை ஒரு சிறிய அறையில் சில மணி நேரம் தடுத்து வைத்தனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சென்று மேர்வின் சில்வாவை பாதுகாப்பாக வெளியில் அழைத்து வந்தனர். மேர்வின் சில்வா வெளியில் அழைத்துச் செல்லப்படும் போது ஊ சத்தமிட்டு ஊழியர்கள், அவர் மீது மை கலந்த திரவம் ஒன்றை வீசினர்..

Related posts

இன்று(14) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவானோர் விபரம் அடங்கிய வர்த்தமானி…

wpengine

பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine