உள்நாட்டு செய்திகள்

மேர்வினுக்கு கொலை மிரட்டல்



முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த, தொலைபேசி இலக்கம் கொண்ட சிம் அட்டை உரிமையாளர் இன்று காலை 09 மணிக்கு நாரஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கி சென்றுள்ளார்.

பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்தவரான அவர், தனது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த நண்பருக்கு சிம் அட்டை வாங்கி கொடுப்பதற்கு உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அந்த நபரை நாரஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் ஒன்று பெற்றுக்கொள்ளவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 16ம் திகதி நாரஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக போட்டியில் தாமதம்…

wpengine

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

wpengine

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

wpengine