விளையாட்டு

மெஸ்ஸியின் குட்டி ரசிகருக்கு கிடைத்தது அதிர்ச்சிப் பரிசு



பிளாஸ்டிக் பை சட்டையுடன் விளையாடி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஆப்கான் சிறுவனை சந்தித்து பரிசுகள் வழங்கியுள்ளனர் மெஸ்ஸியின் நண்பர்கள்.

ஆப்கானிஸ்தானில் உதைப்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்ட 5 வயதான முர்டாஸா அகமதி பார்சிலோனா உதைப்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்.

மெஸ்ஸியின் ஜெர்ஸி வாங்கித் தருமாறு கேட்ட சிறுவனுக்கு அவரது சகோதரன் பிளாஸ்டிக் பையாலான ஜெர்ஸி ஒன்றை தயாரித்து தந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, சிறுவன் முர்டஸா அகமதிக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவன் முர்டஸா அகமதியை சந்திக்க லயோனல் மெஸ்ஸி ஆர்வமாக உள்ளதாகவும் இவர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே மெஸ்ஸியின் பி.ஆர் நிறுவனத்தை சேர்ந்த சிலர் அகமதியை சந்திக்க ஆப்கானிஸ்தான் வந்தனர்.

அப்போது பரிசாக அகமதிக்கு புதிய ஜெர்சியும், கால்பந்தும் வழங்கப்பட்டது. இதனை அணிந்து கொண்ட அகமதி துள்ளிக் குதித்து விளையாடினான்.

இதில், ஜெர்சிக்கு மேலே பிளாஸ்டிக் பை ஜெர்சியை அணிந்து விளையாடியது தான் சிறப்பாகும்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி விளையாடமாட்டார் என அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

messi  messi-boy

messi..  messi....

Related posts

தலைமைப் பதவியிலிருந்து தோனி விலகுகிறார்..

wpengine

உலகக்கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கையில் மாற்றம்..

wpengine

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

wpengine