ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மெரினா கடற்கரைக்கு டிசம்பர் 31ம் திகதி இரவு சீல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..



சென்னை மெரினா கடற்கரைக்குள் டிசம்பர் 31ம் திகதி இரவு எந்தவித வாகனங்களும் நுழையக்கூடாது என காவல்துறை தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் டிசம்பர் 31 இரவு புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுவர். அதில் சென்னையும் ஒன்றும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.

அப்போது, பலத்த பாதுகாப்புகளையும் மீறி பலர் மது அருந்தி விட்டு வேகமாக வாகனங்கள் ஓட்டுவதும், பெண்களை கிண்டல் செய்வதும் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

இது போன்ற நேரத்தில் குடித்து விட்டு வேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் பலர் உயிரிழப்பது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொலிசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதன்படி, டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 9 மணி முதல் ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 3 மணி வரை வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பெசண்ட் நகர் எலியட் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுவோர் மீதும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

#G-Reeshma..

Related posts

நாமலின் ரகசியத்தை நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

wpengine

மஹேல மற்றும் சங்காவின் “Ministry of crab” இந்தியாவில்…

wpengine

புத்தர் சிலையில் ஆபாசம்

wpengine