Top Story 3உள்நாட்டு செய்திகள்

மெகசின் சிறைச்சாலை : விசாரணைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 திகதி முதல் டிசம்பர் 31 வரையான காலப் பகுதியில் மெகசின் சிறைச்சாலை சுவர் மீது சட்டவிரோதமாக எறியப்பட்ட 54 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 47 கையடக்க தொலைபேசிகள், 22 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப்படும் 57 மின்கலன்கள், 13 மின்னேற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இது தவிர 16 ஹெரோயின் சிறிய பொதிகளும் 9 ஐஸ் ரக போதைப்பொருள் பொதிகளும், சிறிய ரக கஞ்சா போதை பொருள் பொதிகள் 34ம், 569 புகையிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 71 சிகரட்டுக்கள், 14 லைட்டர்கள், 7 பீடி கட்டுக்கள், 400 மில்லி மீற்றர் மதுபான போத்தல் என்பனவும் மீட்கப்பட்டதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை முடிவை எதிர்த்து வைத்தியர்கள் மனு தாக்கல்..!

wpengine

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு…

wpengine

அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்…

wpengine