விளையாட்டு

மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தானிடம் தோற்றது இலங்கை அணி..



இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

5 ஆட்டங்களை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பாக உப்புல் தரங்க 61 ஓட்டங்களையும், திஸ்ஸர பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றார்கள்.

பந்து வீச்சில் ஹசன் அலி 34 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இமாம் 100 ஓட்டங்களையும், ஹவீஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

(rizmira)

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

wpengine

உலக கிரிக்கெட் நின்று பொய் விட்டது போல் பிரமையா – யூசுப் கேள்வி

wpengine

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை பட்டியல் – தொடர்ந்தும் இந்திய முன்னிலையில்

wpengine