விளையாட்டு

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி..



இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று(07 இடம்பெற்ற குறித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தமது 34வது ஒருநாள் சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்து துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி, 40 ஓவர்களில் 179 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதன்படி இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 

#rish

Related posts

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை….

wpengine

லசித் மாலிங்க தாயகம் திரும்பினார்..

wpengine

பாகிஸ்தான் வீரர் அஸாம் சங்காவினது ஒருநாள் போட்டி சாதனையினை முறியடிக்க தயாராகிறார்..

wpengine