உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை தோல்வி….



(FASTNEWS | SOUTH AFRICA) – இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் போட்டி 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

Related posts

டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை குறித்து எரிசக்தி அமைச்சர் கவலை.

wpengine

சஜினின் வீடு CID இனால் சோதனை

wpengine

கனுலாவினால் (cannula) ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழப்பு..!

wpengine