உலக செய்திகள்

முஹம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை ஒளிபரப்ப நெதர்.தொலைக்காட்சி தடை விதித்தது



இறைதூதர் முஹம்மது நபியைக் காட்டும் கேலிச் சித்திரங்களை நெதர்லாந்து தொலைக்காட்சிகளில் நேற்று ஒளிபரப்புவதாக தகவல்கள் தீயாய் பரவின.

முன்னதாக இறைதூதர் முஹம்மது நபியைக் காட்டும் கேலிச் சித்திரங்களை நெதர்லாந்து தொலைக்காட்சிகளில் சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்போவதாக நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி அரசியல்வாதி கியர்த் வில்டர்ஸ் கூறியிருந்தார்.

அரசியல் கட்சிகளுக்கென ஒதுக்கப்படும் ஒரு ஒளிபரப்பு நேரத்தில், தான் இதனைச் செய்யப்போவதாக அவர் மேலும்  குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒரு புரிதல் பேதத்தினால் அது ஒளிபரப்பப்படாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனம் சதிசெய்து ஒளிபரப்பைத் தடுத்துவிட்டதென அவர் முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடைசி நேரத்தில் ஒளிபரப்பில் மாற்றம் வந்துள்ளதாகத் தெரிகிறது. முகமது கேலிச் சித்திரங்களைக் காட்டுவதற்கு பதிலாக குடியேறிகள் நெதர்லாந்தை தமது வாழ்விடமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்று கூறும் வீடியோ ஒளிபரப்பானது.

சென்ற மாதம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு துப்பாக்கிதாரிகளை காவலர்கள் சுட்டுக்கொன்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் அதிவேக விமானம்.. லண்டன்- நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம்…

wpengine

ஊழல் மோசடி வழக்கில் சம்சுங் நிறுவன தலைவரின் மகன் மீதும் குற்றச்சாட்டு…

wpengine

கடும் குளிருடனான வானிலை – அவசரநிலை பிரகடனம்…

wpengine