உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் மக்களின் வாயில் கதவுகளை பதம்பார்த்த “சிங்க லே ” குறித்து ஹர்ஷ கருத்து



இனங்களுக்கு இடையில் பேதங்களை உருவாக்க முற்படுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, தொடர்ந்தும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்காதிருக்க வேண்டும் என, பிரதி வெளிவிவகாரஅமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் முன்வைத்துள்ள பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சிலரால் நுகேகொடை பகுதியிலுள்ள மூன்று முஸ்லிம் வீடுகளின் முன்னாலுள்ள வாயில் கதவுகள் (கேட்) மற்றும் சுவர்களில் “சிங்க லே” என எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் தனது கருத்தை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ஆராய பொறுப்புள்ள அதிகாரிகளை அந்தப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதுபோன்ற செயற்பாடுகள் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை பாதிக்கும் எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

81 அரச பாடசாலைகள் மூட வேண்டிய நிலை – கல்வி அமைச்சர்..!

wpengine

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

wpengine

பிச்சைக்காரர் போல அரசாங்கம் – சாப்பிட குடிக்க வழங்குமாறு உலக நாடுகளின் கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும்..!

wpengine