ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிக்கு தடை…! 700 பள்ளிகளுக்கு பூட்டு..



முஸ்லிம் பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகளுக்காக ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்படுவதினை ருவாண்டா நாட்டின் தலைநகரமான கிகாலியில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி இனூடாக ஒருநாளைக்கு ஐவேளை முஸ்லிம் மக்களுக்கான வணக்க வழிபாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இதனால் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமம் நிலவுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் அமைப்புக்களால் குறித்த தடையினை கண்டிக்கும் அதே நேரம், ஒலிபெருக்கியின் சத்தத்தினை குறைத்து பாவிக்க அனுமதி வழங்குமாறு அந்நாட்டு அரசிடம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தடையினை மீறிய சுமார் 700 பள்ளிவாசல்கள் அந்நாட்டு அரசினால் கடந்த மாதம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் சனத்தொகையில், 56.9% ரோமன் கத்தோலிக்கர் என்பதோடு, முஸ்லிங்கள் 4.65% என்பமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தான் பெற்ற குழந்தையை நாயைப் போல் நடத்திய தாய்

wpengine

தேர்தலில் படுதோல்வி அடைய காரணம் என்ன? உண்மையை வெளிப்படுத்தினார் மஹிந்த

wpengine

இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு

wpengine