Top Story 3உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்- வௌியான வர்த்தமானி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், முஹம்மத் சாலி நளீம் குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு

wpengine

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு…

wpengine