உள்நாட்டு செய்திகள்

முஸம்மிலின் மனைவி நதீகா ஹர்ஷிணி FCID முன்னிலையில்..


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸம்மில் மனைவி நதீகா ஹர்ஷிணி பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவுக்குஇன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தான வாகனங்களை பாவித்துசுமார் 62 லட்சம் ரூபா அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில்வாக்கு மூலம் வழங்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது அவரது வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்க கடந்த 20ம் திகதி நிதிகுற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட்முசம்மில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூ.182 ஐயும் தாண்டியது…

wpengine

கடுவெல – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

வேட்புமனு தாக்கல் நிறைவு

wpengine