உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவு மாணவி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு



(FASTNEWS | COLOMBO) – முல்லைத்தீவு றோமன் கத்தோலிக பாடசாலையொன்றில் வைத்து உயிரிழந்த இ.லிந்துசியா மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி எஸ். லெனின் குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த தரம் 7 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி கடந்த ஜூலை மாதம் 29ம் திகதி பாடசாலை சென்றுள்ளதோடு, மதியம் 12.30 மணியளவில் பாடசாலையில் வைத்து அவருக்க இழுப்பு (சுவாச நோய்) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் 2 மணியளவிலேயே குறித்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே காரணமென குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு…

wpengine

பாகிஸ்தானினை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி..

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

wpengine