உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவு மக்களின் கசப்பான உணர்வுகளை மீட்க தாழ்வாகப் பறந்த விமானம்



விமானப் படையின் விமானமொன்று இன்று மதியம் 11.45 மணிக்கு மிகத்தாழ்வகப் பறந்து முல்லைத்தீவு மக்களின் கசப்பான நிகழ்வுகளை மீட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, விசுவமடு ஊடாக இரணைமடு நோக்கி இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி விமானமொன்று மிகத்தழ்வாகப் பறந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக குறித்த விமானம் தாழ்வாகப் பறந்திருக்கலாம்.  எனினும், ஓய்ந்திருந்த மழை தற்போது பெய்யத் தொடங்கியுள்ளது.

விமானம் பறந்தமையானது, போரினால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் கடந்தகால நினைவுகளை மீள நினைவுபடுத்தியதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

 

Related posts

மறைந்த சோபித தேரரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக

wpengine

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கவனம்

wpengine

கரையோர ரயில் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine