ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முல்லைத்தீவுக்கு சுனாமி அச்சுறுத்தல்?



(FASTGOSSIP | COLOMBO) – முல்லைத்தீவு நாயாற்று கடற்கரையில் இருந்து கொக்கிளாய் வரையிலான கடற்கரையில் நேற்று(19) பிற்பகல் முதல் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்பட்டுள்ள நிலையில், கரைக்கு அலை வந்து சென்றதன் பின்னர் கடற்கரையில் கறுப்பு நிறத்தில் தார் போன்ற கரையில் படிந்து விடுகின்றதாக கூறப்படுகின்றது.

கறுப்பு நிறத்திலான இந்த திரவம் பாதங்களில் பட்டால், அதனை நீக்குவது சிரமமாகும். அத்துடன் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் கொழும்பில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் மற்றும் கடல் ஆய்வாளர்கள், கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முல்லைத்தீவு கடல் நீர் மட்டம் 5 அடி உயர்வடைந்த நிலையில் சுனாமி அச்சம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்மையும் குறிப்பிடத்தகது.

Related posts

இம்ரான் கானாக மறுவாரா மலிங்க

wpengine

அப்போலோ மருத்துவர்கள் கண்காணிப்பில் கருணாநிதி… ஜெயாவிற்கு நேர்ந்த கதியினை நினைத்து லண்டன் மருத்துவர்களை வரவழைக்க முடிவு…

wpengine

தோல்வியில் முடிந்த பேரணியினை மறைக்க கோத்தபாயவின் திட்டம்… – (Photos)

wpengine