உள்நாட்டு செய்திகள்

முறி மோசடி குறித்து விசாரணை செய்ய, தனியான நீதிமன்றமொன்று வேண்டும் – சம்பிக்க


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குறித்து விசாரணை செய்ய, தனியான நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டளி சம்பிக்க  ரணவக்க  அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட சகலரையும் சட்டத்தின் முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருந்தால், அரசாங்கமும் ஊழலில் விழுந்துள்ளது என்பதே அர்த்தமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட சட்டமொன்றின் மூலம், புதிய நீதிமன்றத்துக்கான சட்டத்தை  கொண்டுவர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் உத்தியோகபுர்வ உரிமையை இ.போ.ச.வுக்கு வழங்குமாறு அழுத்தம்.

wpengine

டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட அறுவருக்கும் பிணை…

wpengine

ஸ்ரீ.சு.பொ.முன்னணியின் பெயரிட்ட ஆவணம் சமர்ப்பிப்பு

wpengine