கேளிக்கை

முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?



(FASTGOSSIP|COLOMBO) – இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கவுள்ளனர்.

முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குகிறார்.

ஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்துள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டனர்.

இதனால் அந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

‘சலார்’ திரைப்படத்தில் ஜோதிகா

wpengine

லொஸ்லியா தந்தை மரியநேசன் மரணம்

wpengine

விராட் கோலி வெளியிட்ட Good News

wpengine