உள்நாட்டு செய்திகள்

முன்னாள் STF கட்டளைத் தளபதி அதிகாரிக்கு பிணை.


பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜூப் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படிருந்தார்.

இந்நிலையில், இன்று சரத் சந்திரவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷ் VS இலங்கை, ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை எச்சரிக்கை..

wpengine

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்.. முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்..

wpengine

சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து

wpengine