உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் DIG அநுரவின் பிணை மனு திங்களன்று விசாரணைக்கு



றகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபடுவதாக கூறப்படும் முன்னாள் மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்குப் பிணை கோரி, அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஜூலை 18ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தாஜுதீனின் கொலையை மறைக்க முயன்றார் எனக் குற்றஞ் சாட்டப்பட்ட சேனநாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, ஜூலை 20ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாஜுதீன் கொல்லப்பட்ட அன்று காலை, நாரஹேன்பிட்ட சாலிகா விளையாட்டு அரங்குக்கு அண்மையில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காணப்பட்டதற்குச் சாட்சியுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.

மேலும், அநுர சேனாநாயக்க, சாட்சியங்களை மறைத்தார்ƒ கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினார் என்று நிரூபிப்பதற்கு போதியளவான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

wpengine

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

wpengine

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

wpengine