உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் 501 இடமாற்றங்களை வழங்கியதாக அம்பலம்…



இலங்கை மத்திய வங்கியின் 501 பணியாளர்களை அர்ஜூன் மகேந்திரன் இடமாற்றம் செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் கடமையாற்றிய காலத்திலேயே மேற்குறித்த இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திணைக்களங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என நிதிச் சபையின் செயலாளர் எச்.ஏ. கருணாரட்ன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்.

வழமையாக ஆண்டு ஒன்றுக்கு 200 இடமாற்றங்கள் செய்யப்படும் போதும், மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் 500 பணியாளர்களை இடம் மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறப்பு கூட்டம் இன்று..

wpengine

விமல் வீரவங்சவின் இரத்த மாதிரி பரிசோதனை குறித்து விசாரணை…

wpengine

சஜித் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

wpengine