உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்



(FASTNEWS|COLOMBO) – முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் தனது 67 வது வயதில் காலமானார்.

சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உட்பட முக்கிய தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் காங்கிரஸ் எம்.பி.யும், மாநிலங்களவையின் தலைவருமான குலாம் நபி ஆசாத், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் உட்பட பிற கட்சி தலைவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சுஷ்மா சுவராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

மேல் மாகாண சபையின் 2019 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்…

wpengine

ஹம்பாந்தோட்டையில் சீன கைத்தொழில் வலயம்

wpengine

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine