உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரணவுக்கு பிணை.


சொத்து மதிப்பை வௌிப்படுத்த மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் கிஹான் பிலபிடிய மேற்குறித்த இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

இரண்டு வருட காலமாக அவரது சொத்து மதிப்பு தொடர்பில் வௌிப்படுத்த வில்லை என தெரிவித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் திகதி முன்னாள் பிரதி அமைச்சருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

wpengine

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன காலமானார்…

wpengine

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உப தலைவர் கைது…

wpengine