உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசரின் மனு தள்ளுபடி…



மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று(14) குறித்த அந்த மனு அழைக்கப்பட்ட போது பெரும்பான்மை தீர்மானத்தின் படி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு மாற்றமானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மனுவுக்கு எதிர்ப்பு வௌியிட்ட சட்டமா அதிபர், அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

அதன்படி மனுவை விசாரிக்காமல் நிராகரிப்பதற்கான பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்தார்.

Related posts

அவுஸ்ரேலிய கடற்படை கப்பல் இலங்கையில்…

wpengine

கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

wpengine

கரீபியனிலும் மனைவியுடன் வெளுத்துக்கட்டும் சங்கா மற்று திசர..

wpengine