உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பா.உ டிரானின் வழக்கு விசாரணை 23ம் திகதி விசாரணைக்கு..



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் நீதிபதி விகும் கலுஆராச்சி இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்பட்டு டிரானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி பக்கத்தில் இருந்து முன்வைக்கப்பட்ட ஆரம்ப வாதங்களை நிராகரித்த நீதிபதி குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளார்.

 

#rishma

Related posts

இலங்கைக்கு டொலர் வழங்க தயார் – உலகத் தமிழர் பேரவை!

wpengine

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக்கினை கைது செய்ய உத்தரவு

wpengine

குப்பைகளை அகற்றுவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை வகுக்க கூறி உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்..

wpengine