ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது மர்மநபர் தாக்குதல்!



ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ்.டீ.தொடங்கொட மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான தொடங்கொட ஜயவர்த்தனப்புர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நேற்றிரவு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள தனது அலுவலகத்துக்கு சென்று வீடு திரும்பிய வேளை அவரது வாகனத்தை குறுக்காக மறித்த நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும் மிரிஹான பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலை நடத்திய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ரவிக்கு கோல் எடுத்த ராஜித, பதிலளிக்காத ரவி

wpengine

தொட்டிலை ஆட்டி விட்டு குழந்தையை மறுக்கும் கள்ளத்தொடர்பு

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

wpengine