உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினை உடனடியாய் கைது செய்ய உத்தரவு..?



சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ ரங்கா 2011ஆம் ஆண்டு தனிப்பட்ட தேவைக்காக பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியா செட்டிகுளப் பிரதேச வைத்தியசாலை மதிலில் வாகனத்தை மோதியதால், பிரமுகர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பலியானார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பானது தமக்குத் திருப்தியளிக்கவில்லையென பலியானவரின் குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய ரங்காவினை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸ் சட்டப்பிரிவு வடக்கிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிசாருக்கு கட்டளையிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் – ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு

wpengine

பாதாளகுழுக்களுக்கு இடையிலான தகராறில் வெலிபென்ன பதற்றத்தில் – ஒருவர் பலி மூவர் காயம்.. (UPDATE)

wpengine

மேலும் 18 பேர் சிக்கினர்

wpengine