உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்…



முன்னாள் ஜனாதிபதியும் குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று(16) பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார் என அவரது சட்டத்தரணியினூடாக தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணத்தினால் இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாதுள்ளதாகவும் இன்றைய நாளுக்கு பிறிதோர் தினத்தினை வழங்குமாரும் அவர் கோரியுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தினை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

wpengine

அதிகரித்த வேகத்தில் காற்று வீசும்.. – கடற்படையை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு..

wpengine

அனைத்து தொகுதிகளிலும் சர்வஜன அதிகாரம் போட்டி

Azeem Kilabdeen