உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

ஹோமாகம நீதிமன்ற அருகில் துப்பாக்கிச்சூடு

wpengine

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

wpengine