உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் இராணுவ பாதுக்காப்பு நீக்கப்படாது!!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த எஞ்சிய இராணுவ அதிகாரிகள் மற்றும் கமாண்டோ வீரர்கள் 53 பேரினையும் நேற்றைய தினம்(17) முதல் நீக்குவது தொடர்பான தீர்மானம் அரசினால் பிற்போடப்பட்டுள்ளதாக இராணுவ தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ  அவர்களது இராணுவ அதிகாரிகள் மற்றும் கமாண்டோ வீரர்களை நீக்க வேண்டாமென  பல்வேறு தரப்பினாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமையினை கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரச தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு  7.30 குறித்த இராணுவ வீரர்களை இராணுவ முகாங்களுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் குறித்த இராணுவ வீரர்கள்  முகாமிற்கு வருகை தரவில்லை என இராணுவ தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரில்  50 வீரர்களை நீக்க அரசு மே 02 முதல் நடவடிக்கை எடுத்திருந்தமையும்  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு 8000 பொலிஸார் கடமையில்…

wpengine

“மூன்று வேளை உணவின்றி இருப்பவர்களை அரசு கவனிக்க வேண்டும்”..!

wpengine

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கோட்டாபய – பதவி விலகல் கடிதத்திலும் கையெழுத்திட்டார்!

wpengine