ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நாமல்



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

டுபாய் வங்கி கணக்கில் நாமல் ராஜபக்சவின் பெயரில் ஒரு பில்லியன் டொலர் பணம் உள்ளதாகவும், முடியும் என்றால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேற்று முன் தினம் அத்தனகல்லயில் இடம்பெற்ற கூட்டத்தில் சவால் விடுத்திருந்தார்.

இந்த கருத்தினால் தான் அவமதிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு நீதிமன்றத்திற்கு முன்னால் சாட்சி வழங்குமாறும், அவ்வாறு இல்லை என்றால் தான் கோரும் ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈட்டினை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..

wpengine

வயிற்றில் 8 கிலோ சதைப் பிண்டம்

wpengine

வெகுவில் திரைக்கு வெளிவரத் தயாராகும் விக்ரமின் திரைப்படம்..!!

wpengine