உள்நாட்டு செய்திகள்

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆளுங்கட்சியில்?



முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்னும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக ஆளுங்கட்சி வரிசைக்கு அணி மாறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர் அவர் மஹிந்த ஆதரவு அணியிலிருந்து முற்றாக விலகி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படவுள்ளார்.

தற்போதைய நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதற்கிடையே தற்போது எதிரணியில் இருக்கும் கீதா குமாரசிங்க, பவித்திரா வன்னியாரச்சி, மனூஷ நாணயக்கார ஆகியோரும் புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

 

 

(riz)

 

Related posts

எரிபொருள் விலை மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து…

wpengine

ஐக்கிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

News Editor

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

wpengine