உள்நாட்டு செய்திகள்

முன்னாள் இராணுவ ஜெனரல் தயா ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு..



முன்னாள் இராணுவ ஜெனரல் தயா ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமேந்து உற்பத்திசாலையில் 600 தொன் எடையுடைய இயந்திர சாதனங்களை அறுத்து பழைய இரும்பிற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ராட்நாயக்கவை தவிர மேலும் மூன்று முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ம் திகதி பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
(rizmira)

Related posts

வரவு செலவுத் திட்டம் 2021

wpengine

நாட்டின் ஏனைய இடங்களில் சீரான காலநிலை…

wpengine

கர்ப்பிணி பெண் வழங்கிய வதிவிட முகவரி தவறானது

wpengine