உள்நாட்டு செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்..



முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று(07) முற்பகல் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலைக்கு சொந்தமான பெறுமதியான இயந்திர சாதனங்களை வெட்டி, பழைய இரும்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஓர் கட்டமாகவே வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக தயா ரத்நாயக்க இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

(rizmira)

Related posts

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

wpengine

நாலக டி சில்வா சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு..

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு.. (Update)

wpengine