உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

முன்னணி வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் இராஜினாமா



அவுஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர், கிரவுன் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது தீர்மானம் குறித்து அறிவித்ததை அடுத்து கிரவுன் நிறுவனத்தின் வீழ்ச்சி கண்டிருந்த பங்குகளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியை ஏற்று 4 மாதங்களில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாடுகளில் கெசினோ சூதாட்ட நிறுவனங்களை நிறுவியுள்ள கிரவுன் நிறுவனத்தின் வருமானம் கடந்த மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கெசினோ சூதாட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜேம்ஸ் பெக்கர் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அதற்கு பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்புக்கள் வெளியாகின.

கிரவுன் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜேம்ஸ் பெக்கர் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

9 பில்லியன் சொத்துக்களைக் கொண்ட கிரவுன் நிறுவனத்தில் 53 வீத பங்குகள் ஜேம்ஸ் பெக்கருக்கு சொந்தமானதாகும்.

ஜேம்ஸ் பெக்கரின் இராஜினாமாவுக்கு காரணத்தை அவர் இது வரை அறிவிக்கவில்லை.

ஆனாலும் சிட்னி, மெல்பேரன், லொஸ்வெகாஸ் ஆகிய நகரங்களின் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு தனியார் பேரூந்துகளில் இலவச போக்குவரத்து வசதி..

wpengine

நாட்டை சீர்குலைக்கும் வகையில் தவறான முடிவுகளை எடுத்தவர்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார் – உதய கம்மன்பில

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை ஜெயிலர் கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

wpengine