Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முத்துராஜா சம்பவத்தினால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாமை குறித்து சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் மூலம் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக மேற்படி குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

அத்துடன், இச்சம்பவம் இலங்கைக்கு பெரும் அவமானம் எனத் தெரிவித்த அஜித் மன்னப்பெரும, இவ்வாறான சம்பவங்கள் நடந்தால் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டின் மீது என்ன அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டினார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விலங்கியல் திணைக்களம் மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக கடந்த (18) பாராளுமன்றத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு கூடிய போது அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

மாத்தறை – காலி ரயில் சேவை நாளைய தினமும் பாதிப்பு

wpengine

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு..

wpengine

திலங்க தரப்பினர் விளையாட்டு அமைச்சரிடம் வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை…

wpengine