விளையாட்டு

முதல் போட்டியில் வென்றது CSK



(ஃபாஸ்ட் நியூஸ் | ஐக்கிய அரபு அமீரகம் ) –  2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஆரம்பமானது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related posts

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி…

wpengine

1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தினை கைப்பற்றி 20 வருடங்கள் நிறைவினை ஒட்டி T20.. – சனத் இடமிருந்து அழைப்பாணை.. (PHOTOS)

wpengine

இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துவது தான் எமது குறி

wpengine