ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முதல் தடவையாக ஞானசார தேரர், ஜனாதிபதியினை ஆதரிக்கிறார்… – அரசியல் காய் நகர்த்தல்கள் ஆரம்பம்….


மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில், போதைப் பொருள் கடத்தல் குற்றங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்தை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாற்ற முற்படக் கூடாது என பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

மேலும், சமூகத்தின் பாதுகாப்பு கருதி மரண தண்டனை வழங்கும் இறுதி ஆவணத்தில் ஒப்பமிட்ட ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கத்தக்க விடயமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கண்டி வன்முறைக்கு பின்னணி உந்து சக்தியாக குறித்த அமைப்பானது பங்காற்றியமை குறித்து அண்மைக் காலமாக மக்கள் மத்தியிலும் சமூக வலையத்தளங்களிலும் பெருமளவு பொதுபல சேனா அமைப்பானது விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து குறித்த தேரருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விரிசல் நிலைகள் தோன்றின. இதன் பிற்பாடே ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் என்ற காரணத்தினால் விசா மறுப்பு

wpengine

ஆர். சம்பந்தனை நலம் விசாரிக்க சென்ற தந்தையும் மகனும்..

wpengine

யசாரா ஷாருக்குடன் ஒன்றாய் எடுத்த படங்கள் இதுதான்..

wpengine