ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முதலிரவுக்காக அறையில் மணமகன் காத்திருக்க முன்னாள் காதலனுடன் தப்பிச் சென்ற மணமகள்


கண்டி உட­ஹே­வா­ஹெட பிர­தேசத்தில் புதி­தாக திரு­ம­ண­மாகி மண­மகனின் வீட்­டுக்கு வந்­தி­ருந்த மண­மகள், அன்றைய தினம் இரவே தனது முன்னாள் காத­ல­னு டன் தப்பிச் சென்­றுள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 23 ஆம் திகதி இரு­ வீட்­டாரின் ஏற்­பாட்டில் இத் திரு­மணம் இடம்­பெற்­றி­ருந்­தது.சம்­பவம் இடம்­பெற்ற தினத்­தன்று குறித்த மண­மக்­க­ளுக்கு முத­லி­ரவு ஆயத்­தங்கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

அவ்­வாறு ஆயத்தம் செய்­யப்­பட்­டி­ருந்த அறை­யினுள் மண­மகன் சென்று பார்த்த போது அங்கு மண­மகள் இருக்­க­வில்லை. எனினும் அவர் வந்து விடுவாள் என மண­மகன் சிறிது நேரம் காத்­தி­ருந்­துள்ளார்.

வெகு­நே­ர­மா­கியும் மண­மகள் வரா­ததால் சந்­தேகம் கொண்ட மண­மகன் இவ்­வி­டயம் தொடர்பில் வீட்­டா­ருக்கு தெரி­வித்து விட்டு வீடு முழு­வதும் தேடியும்  காணப்­ப­ட­வில்லை.

சற்று நேரத்­துக்கு முன்­பாக குறித்த வீட்­டி­ன­ருகில் இருந்து முச்­சக்­கர வண்டி ஒன்று புறப்­பட்டு சென்­றி­ருந்­த­த­துடன் மண­மகள் அதில் சென்­றி­ருக்­கலாம் என வீட்டார்  சந்­தே­கித்­துள்­ளனர்.

மண­மகள் தனது பெற்றோர் வீட்­டுக்கு சென்­றி­ருப்­பாரோ  என்ற சந்­தே­கத்தில் பெண் வீட்­டாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்­களும் தங்­க­ளது மகள் இங்கு வர­வில்லை என தெரி­வித்­துள்­ளனர்.

மண­ம­களின் தொலை­பே­சிக்கு தொடர்பு கொண்ட போதும் எவ்­வித பதிலும் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

எனினும் சிறிது நேரத்தின் பின் குறித்த பெண் தனது பெற்­றோ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு தான் இங்கு சந்­தோ­ச­மாக இருப்­ப­தா­கவும் தன்னை தேட வேண்டாம் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்த இரு வீட்­டாரும் விரைந்து அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்­த­தோடு பெண்ணின் பெற்றோர் தனது மக­ளுக்கு தொலை­பே­சி­யி­னூ­டாக அழைப்பு விடுத்து இப் பிரச்­சி­னையை தீர்த்துக் கொள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு வரு­மாறு அழைத்­தி­ருந்­தனர்.

அவரும் அதற்­கி­ணங்க அவர்கள் குறிப்­பிட்ட தினத்தில் பொலிஸ் நிலை­யத்­திற்கு வரு­வ­தாக அறி­வித்தார்.

இந்­நி­லையில் அவரின் வரு­கைக்­காக இரு­த­ரப்­பி­னரும் நாள் முழு­வதும் பொலிஸ் நிலை­யத்தில் காத்­தி­ருந்த போதும்  அங்கு வரவில்லை.

பின்னர் இப் பெண் தனது முன்னாள் காதலனுடன் சென்றுள்ளார் என்பதனை விசாரணைகளின் மூலம் அறிந்த கொண்ட பொலிஸார் மணப் பெண்ணை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மஹாநாம தேர்தலில் களமிறங்குவது பொய்யானது…

wpengine

அமெரிக்கா செல்வதற்கு எதிர்பார்த்திருந்தும் தனக்கு வீசா வழங்கவில்லை…

wpengine

கரப்பான் பூச்சிற்கு பயந்த துருக்கி அதிபர்

wpengine