ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முதலிடம் பிடித்த நயன்தாரா


சமீ­பத்தில் ஆங்­கில பத்­தி­ரிகை ஒன்று தென் இந்­திய நடி­கை­களில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்­துக்­கணிப்பை ரசி­கர்­க­ளிடம் நடத்­தி­யது.

இதில் நயன்­தாரா முதல் இடத்தை பிடித்­துள்ளார்.

திரை உலகில் கதா­நா­ய­கி­யாக அடி­யெ­டுத்து வைப்­ப­வர்கள் எல்­லோரும் ஜெயிப்­பதில்லை.

ஹீரோயின் ஆன­வர்கள் அனை­வ­ருக்கும் தொடர்ந்து வாய்ப்­புகள் வரு­வ­தில்லை. வந்­தாலும் ஒரு சில ஆண்­டு­களில் ரசி­கர்கள் அவர்­களை மறந்து விடு­வார்கள்.

இந்த வரம்­புகள் அனைத்­தையும் உடைத்து எறிந்து 10 ஆண்­டு­களுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலை­யாள பட உலகில் கொடி கட்டி பறப்­பவர் நயன்­தாரா.

‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறி­மு­க­மான இவர், தமிழ் பட உலகின் முன்­னணி நாய­கர்கள் அனை­வ­ரு­டனும் ஜோடி சேர்ந்து நடித்­துள்ளார்.

தெலுங்கு, மலை­யா­ளத்­திலும் முன்­னணி நடிகை ஆனார். நயன்­தாரா நடித்தால் அந்த படம் நிச்­சயம் வெற்றி பெறும் என்று திரை யுல­கினர் இவரை சுற்றி வரும் நிலை இப்­போதுள்­ளது.

இப்­போது கருத்து கணிப்­பிலும் தென் இந்­திய நடி­கை­களில் முதலிடத்தை பிடித்­தி­ருக்­கிறார்.

2013 இல் நடத்­திய கருத்­துக்­க­ணிப்பில் தென் இந்­திய நடி­கை­களில் 7 ஆவது இடத்தில் இருந்த நயன்­தாரா இப்­போது முதல் இடத்­துக்கு வந்­தி­ருக்­கிறார்.

அவ­ரது அழகு, நடிப்பு, திறமை அனைத்­தையும் விரும்­பு­வ­தாக கருத்­துக்­க­ணிப்பில் பங்­கேற்ற ரசி­கர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

2 ஆவது இடம் ஸ்ரு­தி­ஹா­ச­னுக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. 3 ஆவது இடத்தை எமி­ஜாக்­சனும், 4 ஆவது 5 ஆவது இடங்களை அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பிடித்திருக்கிறார்கள்.

அடுத்தடுத்த இடங்களில் த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் உள்ளனர்

Related posts

மஹிந்தவின் இளமை தோற்றத்தின் இரசியம் இதுவா..?

wpengine

உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை குழாமின் தலைமை திமுத் கருணாரத்னவுக்கு..

wpengine

GMOA வைத்தியர்களுக்கு மூளை சரியில்லை என நினைக்கிறேன் – லக்ஷ்மன்…

wpengine