உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்கு லஞ்சம் கோரப்படின் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அறிவிக்கவும்



முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது இலஞ்சம் கேட்கப்பட்டால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அறிவிக்குமாறு பெற்றோரிடம் கோரப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு பாடசாலை நிர்வாகத்தால் அரசாங்கத்தினால் குறிப்பிட்டுள்ள பணத்திற்கு மேலதிகமாக பெற்றோரிடம் இலஞ்சம் கேட்கப்படும் பட்சத்தில் முறைப்பாடு செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், அத்துடன் இவ்வாறு பாடசாலை அதிபர்கள் இலஞ்சம் கோருவதாக அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதேபோல் பெற்றோரும் இலஞ்சம் கொடுத்து சிறுவர்களை பிரபலமான பாடசாலைகளில் சேர்க்க முற்படுவது தொடர்பான  முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹோமாகம தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளர் நியமனம்.

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான, விண்ணப்பத்தை நிராகரித்த பள்ளிவாசல்..!

wpengine